டி.20 உலக கோப்பை போட்டி இனி திரையரங்குகளில் நேரலையில் காணலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான தகவலை வெளியிட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான டி.20 உலக கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தையும் ஐநாக்ஸ் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் ஐநாக்ஸ் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளை ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி. ஆடவர் டி.20 உலக கோப்பையின் எட்டாவது பதிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்குகின்றது. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22ம் தேதி தொடங்குகின்றது. இறுதி போட்டி நவம்பர் 13ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஐநாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் நேரலையாகபோட்டிகள் திரையிடப்படும். இதனால் நாம் விரும்பும் விளையாட்டை மிகப்பெரிய திரையில் பார்த்து மகிழலாம்..மாபெரும் இந்த அனுபவத்தையும், சிறந்த ஒலியில் திரையரங்குகள் அதிர கிரிக்கெட்டை கொண்டாடலாம்.
74 நகரங்களில் 165 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்தியா முழுவதும் 705 திரைகளில் என 1.57 லட்சம் இருக்கைகளை ஐநாக்ஸ் கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஐநாக்ஸ் பிவிஆருடன் இணைவதாக தகவல் வெளியானது. இதன் மூ.லம் .நாட்டின். மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் நிறுவனமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.