கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பைலட் கடைசியாக பேசிய உருக்கமான தகவல்கள் பற்றிஅவரது மனைவி பகிர்ந்து கொண்டுள்ளார்..
நேற்று 6 பேருடன் உத்தராகண்ட் மலைப்பகுதியில் வழிபாடு நடத்திவிட்டு தனியார் ஹெலிகாப்டரில் 6 பக்தர்களுடன் புறப்பட்டது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அனில் சிங் என்பவர் ஹெலிகாப்டரை ஓட்டினார்.
மலைப்பகுதியில் உயர சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென மலையில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துஏற்பட்டது. இந்த விபத்தில் அனில் சிங் உள்பட பக்தர்கள் 6 பேர் என 7 பேருமே உடல் கருகி உயரிழந்தனர். வானிலை சரியில்லாததால் விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து ஏற்படும் முன்பாக தனது மனைவி அனந்திகாவுடன் அனில் சிங் பேசியது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு பிரோசா சிங் என்ற மகளும் உள்ளனர். இது குறித்து அனில் சிங்கின் மனைவி ஷெரீன் கூறுகையில் ’’ என்னிடம் என் கணவர் கடைசியாக நேற்று என்னிடம் பேசினார். மகளுக்கு உடல் நிலை சரியில்லை . அவளை நன்றாக பார்த்துக் கொள் என என்னிடம் பேசினார். ’’ என தெரிவித்தார்.