fbpx

ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் விமான பயணிகளுக்கு இது கட்டாயம்! மத்திய அரசு அதிரடி உத்தரவு…!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.அதன் பிறகு அந்த நோய் தொற்று உலகத்தில் சுமார் 221 நாடுகளுக்கு பரவியது. இந்த நோய் தொற்று உலக வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், தான் கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்குள் இந்த நோய் தொற்று ஊடுருவியது அப்போது முதன்முதலாக இந்தியாவிற்கு ஊடுருவிய நோய் தொற்று பரவல் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் தீவிரமடைய தொடங்கியது.

பின்பு மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு எடுத்த பல அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2 வருடங்களாக இந்த நோய் தொற்று பரவல் ஏற்பட்டு வந்த நிலையில் மெல்ல, மெல்ல அந்த நோய் தொற்று பரவல் குறைய தொடங்கியது.

அப்பாடா நோய் தொற்று பரவல் குறைந்துவிட்டது, என்று பொதுமக்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். ஒருபுறம் இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கவனத்தை செலுத்தி கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தான் சீனாவின் தற்சமயம் கொரோனா பிஎஃப் 7 வகை வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே நம்முடைய நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணிகளை மிக தீவிரமாக மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றனர்.

ஆகவே சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வருகை தருவோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை விமான நிலையங்களில் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, தாய்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட 5️ நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் நிச்சயமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

Next Post

ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

Thu Dec 29 , 2022
கடும் பனிப்பொழிவு காரணமாக ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் நோய்டா நகரில் பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக […]

You May Like