fbpx

பிரபல ‘Bisleri’ வாட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் டாடா குழுமம்? பேச்சுவார்த்தை தீவிரம்..!

மினரல் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து வரும் பிரபல பிஸ்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், டீல் முடிவுக்கு வருமா என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும், டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் FMCG நுகர் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே Tata Consumer நிறுவனம் ஹிமாலயன் டாடா, காப்பர் பிளஸ், டாடா குளுக்கோ போன்ற பிராண்டுகளின் கீழ் மினரல் வாட்டர் விற்பனை செய்து வருகிறது. மற்றொரு புறம் மினரல் வாட்டர் தொழில்துறையில் பிஸ்லரி முன்னிலையில் இருக்கிறது. பிஸ்லரியை டாடா குழுமம் கைப்பற்றி விட்டால் மினரல் வாட்டர் மார்க்கெட்டில் டாடாவின் ஆதிக்கம் உயர்ந்துவிடும்.

பிரபல 'Bisleri' வாட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் டாடா குழுமம்? பேச்சுவார்த்தை தீவிரம்..!

இந்தியாவில் மினரல் வாட்டர் துறையின் மார்க்கெட் சுமார் 19000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்படுகிறது. இந்த துறை ஆண்டுக்கு சராசரியாக 13 சதவீதம் வளர்ச்சி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய மினரல் வாட்டர் மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. கொக்ககோலாவின் கின்லே, பெப்சியின் அகுவாஃபினா, பார்லேவின் டெய்லி, ஐஆர்சிடி நிறுவனத்தின் ரயில் நீர் போன்ற பிராண்டுகள் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் FMCG துறையில் களம் இறங்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் ரிலையன்ஸ் விரைவில் தனது மினரல் வாட்டர் பிராண்ட் குறித்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு-விண்ணப்பம் செய்ய மத்திய அரசு அறிவிப்பு...!

Tue Sep 13 , 2022
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. http://tndce.in இணையதளத்தில் மாதிரி படிவம் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான தகுதியை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நடப்பு 2022-23-ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதாரில் இருப்பது போல் பதிவிட வேண்டும். […]

You May Like