fbpx

திருமணம் முடிந்த கையோடு குட்காவை போட்டு எனர்ஜி ஏற்றிக்கொண்ட மணப்பெண்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் கலந்து கொள்ளும் வெகுஜன திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த திருமணத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் திருமண விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண விழா ஏற்கனவே உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மே 26 அன்று நடந்த இந்த பொது திருமண விழாவின் திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அப்போது நடுவழியில் ஒரு மணப்பெண் தன் கணவனிடம் இருந்து மறைத்து, குட்காவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் இதை செய்ய நினைத்தார் அந்த மணப்பெண். ஆன் மறைக்க முடியவில்லை. ஏனெனில் அப்போது செல்போனில் திருமண நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரின் கேமராவில் இந்தக் காட்சி சிக்கியது.

மற்றொரு வீடியோவும் வைரலாகியுள்ளது. மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே திருமண நிகழ்ச்சியின் பிரச்சனை தொடங்கியது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்துகிறார். ராஜஸ்தானின் பாரனில் நடைபெறும் இந்த பொது திருமண விழா உண்மையிலேயே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த விழாவை குறித்து கேள்விபட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால் இந்த திருமண விழாவில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. பல வித்தியாசமான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களும் இந்த திருமண விழாவில் நடைபெற்றுள்ளன. அந்த வீடியோக்களும் தனித்தனியாக வைரலாகி வருகிறது. பாரானில் உள்ள தொண்டு நிறுவனமான ஸ்ரீ மஹாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் இந்த வெகுஜன திருமணத்தை ஏற்பாடு செய்தது. ராஜஸ்தான் மாநில சுரங்கத்துறை அமைச்சர் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

https://twitter.com/HasnaZarooriHai/status/1663572828309028869?s=20

Chella

Next Post

கோவை| செல்போனில் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்ததால் ஆத்திரம்…..! 2வது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன்……!

Thu Jun 1 , 2023
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன் இவருக்கும் வீரம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், வீரம்மாள் வேறொரு நபருடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இவர் கோவை வேராண்டிபாளையம் பகுதியில் டைலர் வேலை பார்த்து வந்தார். அதேபோன்று தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு உணவகத்தின் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் சித்ரா வேலை பார்த்து வந்த […]

You May Like