திருமணம் ஆகி ஆறே மாதத்தில் இளம் ஜோடியும் மோர்பி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் கடந்த ஞாயிறு அன்று மாலை 6.30 மணி அளவில் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 500 பேர் சிக்கிக் கொண்டனர். 141 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் இருந்து மோர்பி சென்ற இளம் ஜோடியும் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் மென்பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஹர்ஷ் மற்றும் அவரது மனைவி மீரா. ஹர்ஷ்ஷின் சொந்த ஊர் ராஜ்கோட் நகரம். எனவே தீபாவளிக்காக மனைவி மீராவை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அங்கு தீபாவளி முடிந்ததும் சனிக்கிழமை ஹர்ஷ தனது பெற்றோர்களுடன் மோர்பிக்கு உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை புதிதாக திறக்கப்பட்ட தொங்கு பாலத்திற்கு உறவினருடன் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை காலையே ராஜ் கோட் நகருக்கு புறப்பட ஹர்ஷ் குடும்பத்தினர் திட்டமிட்டனர். ஆனால் உறவினர்கள் விடவில்லை. இன்று இருந்துவிட்டு நாளைக்கு செல்லுங்கள் என கூறியதால் அவர்கள் அங்கு தங்க நேரிட்டது. அதே வேளையில் மாலை வேளையை கழிக்க மோர்பி பாலத்திற்கு உறவினருடன் சென்றனர்.
ஆனால் மோர்பி தொங்கும் பாலம் 6.30 மணி அளவில் அறுந்து விழுந்தது. எதிர்பாராதவிதமாக ஹர்ஷ், அவரது மனைவி மீரா உள்பட அவர்களுடன் சென்ற உறவினர் என அனைவரும் இந்த விபத்தில்உயிரிழந்தனர்.