மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயன்று வருகின்றது என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில ’’ மொழி விவகாரத்தில் நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் , கன்னட அமைப்புகள் , பிற சங்கங்களுடன் சேர்ந்து ஜனதாதளம் கட்சி கடுமையாக போராடும் என அவர் கூறினார். காங்கிரஸ் , பா.ஜ. ஆகிய 2 தேசிய கட்சிகளும் மாநிலத்திற்கு எதிராக உள்ளனர்.மத்திய அரசு இந்தி திணிப்பை மீண்டும் கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்தி தொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு, மேற்கு வங்கம் , கேரளா போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளார். இந்தி திணிப்பு மூலம் ,மத்திய அரசு மாநில மொழிகளை அழிக்க முயற்சிக்கின்றது. நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. மக்களை திசை திருப்பும் முற்சியில் ஈடுபட்டு வருகின்றது. வரும் 18 மற்றும் 19ல் எம்.எல்.ஏக்களை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்த கூட்டத்தில் மாநிலத்தில் வீடுகள் தோறும் கன்னட கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.