கள்ளக்காதலனை கொலை செய்து உடலை பெரிய சூட்கேசில் அடைத்து எடுத்துச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் திலா மோர் ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண் பெரிய டிராலி சூட்கேசை ஒன்றை இழுக்க முடியாமல் இழுத்து வந்துள்ளார். இதனைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்துள்ளனர். ஆனால், முன்னுக்கு பின் முரணாக பேசிய அந்த பெண் ஒரு கட்டத்தில் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுவானது. இதையடுத்து, அந்த சூட்கேசை திறந்த பார்த்தபோது, உள்ளே ஒரு வாலிபரின் உடல் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
![கள்ளக்காதலனை கொன்று உடலை சூட்கேசில் எடுத்துச் சென்ற இளம்பெண்..! திகில் சம்பவத்தின் பின்னணி என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/02/deadbody-found-underground.jpg)
பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த பெண் பிரீத்தி சர்மா என்றும், காசியாபாத் துளசி நிகேதனில் வசிக்கும் தீபக் யாதவ் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது. கடந்த 3 வருடங்களாக கணவரை பிரிந்து பிரோஸ் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். தன்னை திருமண செய்து கொள்ளுமாறு பிரோஸை வற்புறுத்தி வந்துள்ளார் பிரீத்தி. ஆனால், பிரோசுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை. இதனால், பிரீத்தி மீது கோபமடைந்த பிரோஸ், “நீ ஒரு தந்திரமான பெண், நீ உன் கணவருக்கு விசுவாசமாக இருக்கவில்லை, நீ எனக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், பிரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னார் உடலை மறைக்க பெரிய டிராலி சூட்கேசில் வைத்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்றபோதுதான் போலீசிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.