பிறர் புண்படும்படியான கருத்துக்களை சமூக வலைத்தலங்களில் பதிவு செய்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2015ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 2000ன் பிரிவு 66 ஏன் படி எந்த குடிமகன் மீதும வழக்குத் தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பிரிவின் கீழ் ஆட்சேபகரமான சில தகவல்களை சமூக வலைத்தலங்களில் பதிவு செய்தாலோ , பிறர் மனம் புண்படும்படி பதிவுகள் வெளியிட்டிருந்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படலாம்.
சிந்தனை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் குறித்த கார்டினல் என்பவரது கருத்தை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 ஏ ன் படி தகவல் அறியும் பொதுமக்களின் உரிமை நேரடியாக பாதிக்கப்படுகின்றது எனகூறி ஏற்கனவே 2015ல் இந்த விதி நீக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி யு.யு. லலித் அனைத்து வழக்குகளிலும் குறிப்பிட்ட இந்த பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொள்கின்றனர். எனவே இந்த விதி நீக்கப்படும். பிரிவு 66 ஏ.வில் விதிமீறியதாக கூறப்படும் குற்றப்புகாரை பதிவு செய்ய வேண்டாம் என மாநிலங்களில் உள்ள காவல்துறைகளுக்கு அறிவுறுத்த அனைத்து மாநில உள்துறை செயலாளர்கள் , அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிவு 66 ஏ என்பது தண்டனைக்குரிய குற்றத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் , சம்மந்தப்பட்ட புகாரில் பிற குற்றங்களும் கூறப்பட்டால் , குறிப்பிட்ட பகுதி மட்டும் நீக்கப்படும். ஒருவேளை இப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்து அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் முடிவு எடுத்தால் பல குற்றவியல் வழக்குகளை இந்திய குடிமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில் , ’’ இது போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் எங்கள் பார்வையில் 2015ல் ஷ்ரேயா சிங்கால் – யுனியன் ஆப் இந்தியா வழக்குதான். எனவே புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது..
2000ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 66 ஏ ஸ்ரேயா சிங்கால் எதிராக இந்திய யூனியன்நீதிமன்றத்தால் அரசியலமைப்பை மீறுவதாக கண்டறியப்பட்டது. எனவே எந்த ஒரு குடிமகன் மீதும் வழக்குத்தொடர முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.