மஹாராஷ்டிரா மாநிலத்தில் காதலித்து வந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசித்துவந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணா யாதவ் (26). மற்றும் நேஹா (21) . பெண்ணின் சொந்த ஊர் பீகார் மாநிலம் என கூறப்படுகின்றது. இளைஞரின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் . இவர்கள் இருவரும் பல்கரில் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலை இளம்பெண் நேஹா அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் பின் தொடர்ந்து வந்த இளைஞர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் சி.ஐ.எஸ்.எப் வாகனத்தின் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். எனினும் அந்த வழியாக சென்றவர்கள் கடந்து சென்றார்களே தவிர யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சி.சி.டி.வி . காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கலாம் இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் பெண்ணை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.