கெஜ்ரிவால் கைது எதிரொலி : ஆம் ஆத்மி கட்சியினர் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

 டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும், சிறையில் இருந்த படியே பணிகளை செய்வேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.

Next Post

BJP | 'திருச்சியில் ஜே.பி நட்டா வாகன பேரணிக்கு அனுமதி'… மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு.!!

Sun Apr 7 , 2024
BJP: திருச்சி நகரில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொள்ளும் வாகன பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற […]

You May Like