NEET தேர்வு அலர்ட்!… இன்றே கடைசி நாள்!… NTA முக்கிய அறிவிப்பு

NEET: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளதால், விண்ணப்பிக்காதவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வாயிலாகவே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி 2024-25ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு செய்வதற்கு நேற்று (ஏப்ரல் 9) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை இன்று (10ம் தேதி) வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது

இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 5ம் தேதி நாடு முழுவதும் 14 இடங்களில் நடைபெற உள்ள இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக இன்று இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Readmore: Raid: 45 நிமிடம் திக் திக்.‌‌..! திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரி அதிரடி சோதனை…!

Kokila

Next Post

மொத்தம் ரூ.535 கோடி... பாஜக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்...!

Wed Apr 10 , 2024
மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து டெபாசிட்தாரர்களின் பணத்தை மோசடி செய்ததாக பாஜகவின் சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். “நிதி நிறுவனம் தங்கள் வைப்புத்தொகைக்கு திரட்டப்பட்ட வட்டியை செலுத்த மறுப்பதாகவும், அவர்களின் வைப்புத்தொகையின் வருவாயை மூடவும் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஊடக அறிக்கையின்படி, நிறுவனங்களால் […]

You May Like