திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயது பெண் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். பிள்ளைகளை தாத்தா பாட்டி பராமரிப்பில் விட்டு விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே அந்த பெண்ணுக்கு பெங்களூரில் வேலை பார்க்கும் 35 வயது ஐடி ஊழியருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் தனக்கு திருமணம் நடந்ததை இளைஞரிடம் மறைத்து விட்டு தனக்கு 30 வயது ஆகிறது, இன்னும் திருமணமாகவில்லை என கூறி பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். தனது காதல் விவகாரம் குறித்து தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறி திருமணத்திற்கு அனுமதி வாங்கிய அந்த இளைஞர், தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதில் மணமகன் வீட்டார் திரளாக கலந்து கொண்ட நிலையில், பெண் வீட்டார் தரப்பில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் முதல் கணவர், மாமியார் பராமரிப்பிலிருந்த மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு பாண்டமங்கலத்தில் உள்ள 2வது கணவர் வீட்டிற்கு வந்து, தனக்குத் தெரியாமல் 2வது திருமணம் செய்த அவரது மனைவியை சரமரியாக தாக்கினார்.
அப்போது தான் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், இரண்டு குழந்தைகள் உள்ளதும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை கூறினர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அந்த பெண் மீது புகார் அளித்தனர்.
இதுவரை 5 லட்ச ரூபாயை அந்த பெண்ணுக்காக செலவு செய்து ஏமாந்து விட்டேன் என புலம்பிய 2வது கணவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 2வது திருமணம் செய்த அந்தப் பெண் தனக்கும் வேண்டாம் எனவும், குழந்தைகளும் வேண்டாம் எனக் கூறிவிட்டு முதல் கணவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தனது பேராசையால் இரண்டு கணவர்களையும் இழந்து குழந்தையுடன் தனியாக நிற்கும் அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Read more: தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ. 1000 கிடைக்காது.. மகளிர் உரிமைத்தொகை மேஜர் அப்டேட்..!



