மாநாடு முதல் பிரச்சாரம் வரை.. விஜய்யை பார்த்து அப்படியே காப்பி பேஸ்ட்.. ஸ்டாலின், உதயநிதியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

vijay stalin

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. அனைத்து அரடசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குறுதிகள், பிரசாரம் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆரம்பம் முதலே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


விஜயின் முதல் விக்கிரவாண்டி மாநாடு முதல் தேர்தல் பிரச்சாரம் வரை விஜய் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மக்கள் வெள்ளம் திரள்கிறது. இதனிடையே மக்களை சந்திக்கும் போது விஜய் செய்யும் சின்ன சின்ன செயல்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஆனால் அதை அப்படியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் காப்பி பேஸ்ட் செய்வதாக விஜய் ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி மாநாட்டின் போது விஜய் ரேம்ப் வாக் செய்தார். அப்போது இருபுறமும் நின்ற விஜய் ரசிகர்கள் தவெக துண்டை வீசி எறிந்தனர். இன்னும் சிலரோ தடையை மீறி ரேம்ப் வாக் மேடையில் ஏறி விஜய் அருகில் செல்ல முயன்றனர். மாநாட்டின் இறுதியின் விஜய் தொண்டர்கள் கூட்டத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதன் பிறகு விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் த.வெ.க. தலைவரை காப்பி பேஸ்ட் செய்துள்ளனர். 

பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய்க்கு வேல் மற்றும் மயிலிறகு மாலையை தொண்டர்கள் பரிசளித்தனர். அடுத்த சில நாட்களில் அதே போன்ற ஒரு மாலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் அணிந்தனர். விஜய் பிரச்சார வாகனத்தில் செல்லும் போது தொண்டர்கள் தவெக துண்டை வீசுவார்கள். அதை போல முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு செல்லும் போது தொண்டர்கள் திமுக துண்டை வீசிவார்கள்.

சமீபத்தில் நெல்லையில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சிறுவனை விஜய் தன் தோலில் அமர வைத்தார். அதை போலவே திமுக பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் சிறுவனை பிரச்சார வாகனத்திற்கு அழைத்து வாக்கு சேகரித்தார். தவெக தலைவர் விஜயின் வீடியோக்களையும், அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி வீடியோக்களையும் ரீல் vs ரியல் என தளபதி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

விஜய் அரசியலுக்கு போய்விட்டார், நீங்கள் தான் சினிமாவில் அடுத்து ஸ்டாராக வரப்போகிறீர்கள் . நீங்கள் தான் தமிழகத்தின் விஜய் என்று யாரோ முதல்வரின் ஆழ்மனதில் கூறி உள்ளனர். விஜய் போல அதே வெள்ளை சட்டை, அதே மாதிரியான காக்கி கலர் பேண்ட், அதே ரேம்ப் வாக். ரியலுக்கும் ரீலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Read more: அனல் பறக்கும் தேர்தல் களம்.. நாளை கடலூரில் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி.. உதயநிதிக்கு மறுப்பு..!

English Summary

Netizens mocking Vijay and copying him.. Stalin and Udhayanidhi..!

Next Post

நீங்கள் வெயிலில் வெளியே செல்லும் போது இப்படி உணர்கிறீர்களா..? ஆனால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்..!

Fri Apr 10 , 2026
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, ​​பலருக்கும் உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. வெயிலில் வெளியே சென்ற உடனேயே பலரும் கடுமையான தலைவலியால் அவதிப்படுகின்றனர். சிலர் இதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி, வலி ​​நிவாரணி மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால் மருத்துவர்களோ, வெயிலின் காரணமாக ஏற்படும் தலைவலி என்பது, உங்கள் உடல் உங்களுக்கு அளிக்கும் ஒரு தீவிர எச்சரிக்கை சமிக்ஞை என்று கூறுகின்றனர். வெயில் பட்ட […]
sunlight 2

You May Like