பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை அறிவித்துள்ளது..
நேற்று ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அனைத்து கட்சிகளையும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமித்ஷா கூறியிருந்தார். தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்தே அமித்ஷா சூசகமாக கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை அறிவித்துள்ளது.. தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தவெக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.. விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமித்ஷாவின் கருத்து மற்ற கட்சிகளுக்கு தான் பொருந்தும்.. தவெகவிற்கு பொருந்தாது என்றும் அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது..
திமுக, பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என தவெக மாநில செயற்குழுவில் விஜய் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி என்று விஜய் கூறியிருந்தார். தவெக மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவில் எள் அளவும், எப்போதும் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளது..
Read More : JOB: பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்கள்..! மாதம் ரூ.35,400 ஊதியம்…!