செக்..! கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி…! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…!

Tn Govt 2025

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் 9:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேரடி நியமனத்துக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு 12-ம் வகுப்பில் உயிரியல் பாடம் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.

5 ஆண்டு பணி அனுபவம்: பதவி உயர்வை பொருத்தவரையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர்களாக பணியாற்றுவோர் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்று மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியை பெற்றிருந்தால் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர் ஆவர். நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது பதவி உயர்வு வாயிலாக கால்நடை ஆய்வாளர் பணிக்கு நியமிக்கப்படுவோர் தகுதிகாண் பருவத்துக்குள் 11 மாத கால கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சைடு கேப்பில் சம்பவம் செய்த உதயநிதி..!! மோதிக் கொள்ளும் அதிமுக - பாஜக..!! குஷியில் திமுக..!!

Sun Sep 7 , 2025
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசுவேன்” என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியை அடுத்த 10 […]
Udhayanidhi Stalin 2025

You May Like