புது காதலியுடன் சுற்றும் நாகசைதன்யா? இணையத்தில் வெளியான போட்டோ..!

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா புது காதலியுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். நாக சைதன்யா அதன் பின் பிரபல நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு பரவ தொடங்கியது. அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சோபிதா காட் சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே போல, நாக சைதன்யாவும் காட்டுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் சென்றிருக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாகவும் மீண்டும் இணையத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.. 

Read More: அஜித் பிறந்தநாளில் ரீ-ரிலீசாகும் ‘பில்லா’ திரைப்படம்..  கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்!!

shyamala

Next Post

நடிகை தமன்னாவுக்கு சம்மன்! ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்..!

Thu Apr 25 , 2024
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக  நடிகை தமன்னா வலம் வருகிறார். பையா, சுறா, தில்லாலங்கடி, பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் ஆடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை […]

You May Like