பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள PG தங்குமிடங்கள் மிகவும் பிரபலமானவை. இதை வேலைக்காக நகரம் வருகிற இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், புது பட்டதாரிகள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக் கூறுவதாகவும் ஆன்லைனில் பணம் செலுத்தினால், 12 சதவீதம் ஜிஎஸ்டியும் சேர்ந்து செலுத்தவேண்டு என்று உரிமையாளர்கள் கூறுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
SKDgeek ரெடிட் பயனர் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூரில் செயல்படும் ஒரு பிஜி-இல் இவ்வாறு ஒரு நோட்டீஸ் ஓட்டப்பட்டு இருப்பதை நான் பார்த்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த நோட்டீஸில் இங்கே தங்கி இருப்பவர்கள் அதற்கான வாடகையை ரொக்கமாக மட்டுமே வழங்க வேண்டும் ஆன்லைன் வாயிலாக செலுத்தினால் அதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
30,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்ற இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள் கோபமடைந்து, இந்த நடைமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்து வருகின்றனர். ஒரு பயனர் அரசாங்கம் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார், மற்றொருவர் முறையான பில் வழங்கப்பட்டால் ஜிஎஸ்டியுடன் வாடகை செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பரிந்துரைத்தார். சிலர் ஜிஎஸ்டியுடன் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும், ஜிஎஸ்டி இன்வாய்ஸ் கோரவும் அறிவுறுத்தினர், இதை பிஜி உரிமையாளர் மறுக்க முடியாது.
பெங்களூருவில் ரொக்கமாக மட்டும் பணம் செலுத்துவது இது முதல் முறை அல்ல. சில வாரங்களுக்கு முன்பு, பல உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் UPI கட்டணங்களை மறுக்கத் தொடங்கினர், பணத்தை செலுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகவே இது போன்ற வேலைகளை பிஜி நடத்துபவர்கள் செய்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.
Readmore:வேகவைத்த முட்டை அல்லது பனீர்!. புரதம் நிறைந்த காலை உணவுக்கு எது சிறந்தது?