எய்ட்ஸ் தொற்றுக்கு புதிய தடுப்பூசி!. 99.9% பாதுகாப்பு!. விலை எவ்வளவு தெரியுமா?. அசத்திய அமெரிக்கா!

HIV vaccine 11zon

பல தசாப்தங்களாக HIVக்கு எதிரான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மிக முக்கியமான முன்னேற்றமாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் (FDA), லெனகாப்பவிர் (Lenacapavir) எனப்படும் புதிய மருந்தை அங்கீகரித்துள்ளது.


இந்த மருந்து நீண்ட காலம் செயல்படும் வகையாகும் மற்றும் HIV-யிலிருந்து தெளிவான பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் தான் AIDS நோயை ஏற்படுத்துகிறது. இதுவரை பெரும்பாலான HIV நோயாளிகள் ஒவ்வொரு நாளும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இருந்தனர். இந்த நாட்பட்ட சிகிச்சையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில் சிரமப்படுகின்றனர். இந்தநிலையில், லெனகாப்பவிர் எனப்படும் புதிய மருந்து இந்த நிலையை மாற்றும் திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

நிறுவனம் என்ன சொன்னது? எய்ட்ஸ் நோயை எதிர்த்து பல ஆண்டுகளாக நடைபெற்ற போரில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். எய்ட்ஸுக்கு எதிரான எங்களின் இந்த புதிய மருந்தான ‘யெஸ்டுகோ’ (Yeztugo) நம் காலத்தின் மிக முக்கியமான அறிவியல் முன்னேற்றங்களில் ஒன்றாகும். இது எச்.ஐ.வி. பரவலை முடிவுக்கு கொண்டு வர ஒரு மிகுந்த வாய்ப்பை வழங்குகிறது,” என்று ‘கிலீயாட் சையன்ஸஸ்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஓ’டே (Daniel O’Day) தெரிவித்தார்.

“இந்த மருந்து ஒரு ஆண்டில் இரண்டு முறைகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மேலும் மருத்துவ ஆய்வுகளில் அசத்தலான முடிவுகளை காட்டியுள்ளது, இது எச்.ஐ.வி. தடுப்பில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை குறிக்கிறது. கிலீயாட் அறிவியலாளர்கள் எச்.ஐ.வி.க்கு முடிவு கட்டுவதை தங்கள் எனது வாழ்க்கை பணியாக எடுத்துள்ளனர், மற்றும் இப்போது, எய்ட்ஸ் நோய் தடுப்பு வரம்பில் ‘யெஸ்டுகோ’க்கு (Yeztugo) கிடைத்த FDA அங்கீகாரம் மற்றும் எங்கள் பல பங்குதாரர்களுடன் இணைந்து, அந்த இலக்கை செயல் வடிவமாக மாற்ற உதவ முடியும் என்று கூறினார்.

சோதனை முடிவில் என்ன தெரியவந்தது?. யெஸ்டுகோ என்ற பிராண்ட் பெயரில் சந்தைப்படுத்தப்படும் லெனாகாபாவிர், பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி பரவும் அபாயத்தை 99.9 சதவீதத்திற்கும் மேலாகக் குறைப்பதாக மருத்துவ பரிசோதனைகளில் காட்டப்பட்டுள்ளது. இந்த மருந்துக்காக நிறுவனம் இரண்டு பெரிய மருத்துவ பரிசோதனைகளை நடத்தியது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 2,000 க்கும் மேற்பட்ட பெண்களை உள்ளடக்கிய முதலாவது சோதனை, தொற்றுகளில் 100 சதவீதம் குறைப்பை ஏற்படுத்தியது. 2,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பாலின வேறுபாடு கொண்ட மக்களை உள்ளடக்கிய இரண்டாவது சோதனையில், இரண்டு தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது 99.9 சதவீத தடுப்பு விகிதத்தைக் குறிக்கிறது.

மேலும் சோதனையில் பங்குபெற்றவர்களில் பதிவு செய்யப்பட்ட பக்க விளைவுகளில் ஊசி போடும் இடத்தில் காயம், தலைவலி, மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகள் காட்டின.

இதற்கு எவ்வளவு செலவாகும்?மேற்கூறிய இரண்டு சோதனைகளின் முடிவுகளும் தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டன, அறிவியல் இதழ் லெனகாபவிரை 2024 ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் திருப்புமுனை” என்று பெயரிட்டது. இருப்பினும், இந்த மருந்து அதிக விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யெஸ்டுகோவிற்கான விலையை கிலியட் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு USD 25,000 அல்லது ரூ.21 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எச்.ஐ.வி தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர விலையை வெகுவாகக் குறைக்குமாறு உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள் கிலியடிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Readmore: சன் டிவி நெட்வொர்க் இயங்குவதில் சிக்கல்.. உரிமத்தை ரத்த செய்ய கோரும் தயாநிதி..!! வெடிக்கும் பிரச்சனை..

KOKILA

Next Post

விமானத்தில் பெண் அட்டூழியம்.. பயணியின் தலைமுடியை இழுத்து தாக்குதல்.. கருப்பினம் குறித்து அவதூறாக பேசியதால் பரபரப்பு..!!

Fri Jun 20 , 2025
Southwest Airlines விமானத்தில் பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணியின் தலை முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து […]
Southwest Airlines

You May Like