நிமிஷா பிரியா மரண தண்டனை முற்றிலும் ரத்து!. இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!. கிராண்ட் முஃப்தி அலுவலகம் உறுதிசெய்தது!.

Nimisha Priya case 11zon

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் காந்தபுரம் ஆந்திராவின் கிராண்ட் முப்தி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.


கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார். நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.

இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. கேரளா வந்தபோது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டை சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதியே நிறைவேற்றப்பட இருந்தது.

இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் காந்தபுரம் ஆந்திராவின் கிராண்ட் முப்தி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னதாக, ஏமன் தலைநகர் சனாவில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது, அதில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், இப்போது ஒரு புதிய முடிவில், அவரது தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக ஏமன் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அல்லது எழுத்துப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.. சொந்தமாக கரன்சி இல்லை.. ஆனால் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யாத அளவுக்கு பணக்காரர்களாக வாழும் மக்கள்…

KOKILA

Next Post

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி பயிர் கடன் வாங்க இதெல்லாம் தேவையில்லை..!! - தமிழக அரசின் முக்கிய அப்டேட்

Tue Jul 29 , 2025
No more CIBIL score required to take crop loan..!! - Important update from Tamil Nadu government
farmers1

You May Like