’3 நாட்கள் இல்லை.. 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை’..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மட்டுமல்லாமல் மொத்தம் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளான ஏப்ரல் 17, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18, வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 19 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி அன்றும், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டியும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 6 நாட்களுக்கு கடை விடுமுறை வருவதாலும், தொடர்ந்து 3 நாட்கள் இந்த மாதம் லீவு வருவதாலும் மதுப் பிரியர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

Read More : இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! 2 வருஷம் ஜெயில் உறுதி..!!

Chella

Next Post

ராம நவமி!… விஷ்ணுவின் அருள் கிடைக்க!… பார்வதி தேவியிடம் சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா?

Wed Apr 17 , 2024
Rama Navami: விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறப்பை நினைவுகூரும் ராம நவமி நீதி, ஒழுக்கம் மற்றும் கருணையின் நாளாக போற்றப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில் ராமரின் பிறந்தநாளை கொண்டாட அவரது பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். ராம நவமியின் புனித திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் […]

You May Like