ஹைதராபாத்தில் இயங்கும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கீழ் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் மற்றும் உதவி திட்ட பொறியாளர் ஆகிய பதவிகளுக்கான 23 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது.
பணி விவரம்:
திட்ட பொறியாளர் – 15
தொழில்நுட்ப நிபுணர் – 5
உதவி திட்ட பொறியாளர் – 3
வயது வரம்பு: திட்ட பொறியாளர் பதவிக்கு 33 வயது வரை இருக்கலாம். தொழில்நுட்ப அதிகாரி மற்றும் உதவி திட்ட பொறியாளர் பதவிகளுக்கு 30 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: திட்ட பொறியாளர் பதவிக்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிகஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்ஸ்ரூமெண்டேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்ப அதிகாரி மற்றும் உதவி திட்ட பொறியாளர் பதவிகளுக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் மற்றும் சார்ந்தவற்றில் இளங்கலை பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிக்கு ஆர்வமாக இருப்பவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். தேர்வு கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு, தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். சென்னையில் உள்ள பணியிடங்களுக்கு கிண்டியில் அமைந்துள்ள ECIL மண்டல அலுவலகத்தில் நேர்காணல் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும்.
சம்பளம்:
- திட்ட பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.40,000 வழங்கப்படும். இரண்டாம் வருடம் ரூ.45,000, மூன்றாம் வருடம் ரூ.50,000 மற்றும் நான்காம் வருடமும் ரூ.55,000 என சம்பளம் உயர்த்தப்படும்.
- தொழில்நுட்ப நிபுணர் பதவிக்கு மாதம் ரூ.25,000, இரண்டாம் வருடம் ரூ.28,000 மற்றும் மூன்றாம் வருடம் ரூ.31,000 வழங்கப்படும்.
- உதவி திட்ட பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.25,506 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன், ரெஸ்யூம் மற்றும் அனைத்து அசல் ஆவணங்களை நேர்காணலுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நேர்காணல்: 16.12.2025 காலை 9.00 மணி.



