இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை- யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இனி 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. மேலும் 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.


கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களிடம் பாதி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1newsnationuser5

Next Post

களத்திற்கு உள்ளேயோ வெளியேவோ எப்போதும் சென்னை அணி உடனேயே இருப்பேன்….! தல தோனியின் பதிலால் உற்சாகமடைந்த சென்னை அணி ரசிகர்கள்……!

Wed May 24 , 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் கடைசி ஐபிஎல் தொடராக தற்போதைய தொடர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையில், இந்த தொடர் முழுவதும் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில், ரசிகர்கள் குவிந்து ஆராவாரம் செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் எதிரணியின் வீரர்கள் பலரும் சென்னை அணி உடனான போட்டி முடிவடைந்த உடன் தோனியை சந்தித்து அவர்களின் உடை மீது […]
dhoni retirement

You May Like