விமானத்தில் பயணிக்கும் போது இனி இது தேவையில்லை…!! கழற்றி வீசுங்கள்…!!

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று நோய் அபாயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக விமானத்தில் பயணிப்போருக்கு அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த விதிமுறை விமானத்தில் மட்டுமின்றி பேருந்துகள், பொது இடங்கள், அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இதன் காரணமாக சிலருக்கு மாஸ்க் அணிவது சிரமத்தை தந்தாலும் கட்டாயத்தின் பேரிலும் , தொற்று நோய் அபாயத்தின் காரணமாக அணிந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டகவே விதிகள் தளர்த்தப்பட்டு வந்தது. அந்த வகையில் விமானங்களில் இதுவரை கட்டாயமாக்கப்பட்டிருந்த இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு மாஸ் அணிவது கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது. எனினும் கொரோனா வைரஸ் ஆங்காங்கே மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’ இதுவரை விமானத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இனி மாஸ்க் அணிவது கட்டாயம் கிடையாது. எனினும் கோவிட்-19 நிர்வாகத்திற்கு இறுதி முடிவு எடுத்து உத்தரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இருந்தாலும் இது பற்றி தகவல் தொடர்பு துறை ’’ இனி விமானத்தில் உள்ள அறிவிப்புகள் கோவிட்-19 ன்அச்சுறுத்தல்களை கருத்தி வைத்து அனைத்து பயணிகளும் முகக் கவசத்திற்கு முன்னுரிமைஎன குறிப்பிட்டிருக்கும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில மாநிலங்களில் மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு சில தருணத்தில் பயணிகள் மறந்துவிட்டு முகக்கவசத்தை எடுத்துவரவில்லை என்றால் டோக்கன் வழங்குவது மறுக்கப்படுகின்றது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாநில அரசுகள் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Post

நளினி வழக்கறிஞர்கள்  லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள்… எங்கிருந்து பணம் வருகின்றது.. அனுசுயா ஆவேசம்!!

Wed Nov 16 , 2022
நளினியின் வழக்கறிஞர்கள் அனைவருமே லட்சக்கணக்கில் பணம் வாங்குபவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாட்சியமாக இருந்த காவல்துறை பெண் அதிகாரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதையடுத்து நளினி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் சாட்சியாக இருந்த போலீஸ் அதிகாரி அனுசுயா என்பவர் பற்றியும் தெரிவித்தார். அவர் தன்னை […]

You May Like