’ஐடி கணக்கு தாக்கல் செய்ய இனி ஒரே படிவம்’..? மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி..!!

ஐடி கணக்கு தாக்கல் செய்ய ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது.

வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு கணக்குத் தாக்கல் செய்வதற்காக தற்போது 7 வகை படிவங்கள் இருக்கிறது. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான விதமாக ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இது பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ”வருமான வரி செலுத்துவதற்கு ஒரே படிவத்தை அறிமுகப்படுத்துவது பற்றி சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

’ஐடி கணக்கு தாக்கல் செய்ய இனி ஒரே படிவம்’..? மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி..!!

மேலும் சிறு, நடுத்தர வரி செலுத்துவதற்கான வருமான வரி படிகள் 1, 4 தொடர்ந்து இருக்கும். ஆனால், தனி நபர்கள் பொதுவான வருமான வரி படிவத்தையும் பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், டிஜிட்டல் சொத்துக்கள் மூலமாக வந்த வருமானத்தை தெரிவிக்கவும் புது பொது வருமான வரிப்படுவதில் தனிப்பகுதி இருக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஈஃபில் டவர் முன்பு வருங்கால கணவருடன் ஹன்சிகா மோத்வானி ’’ரொமான்டிக்’’ போஸ்…!!

Wed Nov 2 , 2022
டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டில் இருவரும் பிசியாக உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவர் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். காதலர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் பாரிஸ் நகரத்தில் காதல் சின்னமாக கருதப்படும் ஈஃபில் கோபுரம் […]
திருமணம் ஆன உடனே விவகாரத்து..!! ஹன்சிகா குடும்பத்தில் நடந்த மிகப்பெரிய சோகம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like