நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்..
ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. இந்த ரயில் நிலையத்தின் மஞ்சள் பலகையில் எதுவும் எழுதப்படவில்லை, முற்றிலும் வெறுமையாகவே உள்ளது!
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால், இவற்றில் ஒன்றே மட்டும் மிகவும் விசித்திரமான காரணத்துக்காக பிரபலமாக உள்ளது — அந்த நிலையத்துக்கு பெயரே இல்லை!
பயணிகள் எப்படி இறங்கும் இடத்தை அறிந்துகொள்வார்கள்? பெயரில்லாமல் டிக்கெட் எப்படிச் சாத்தியம்? — என்ற கேள்விகள் இயல்பாக எழும். ஆனால், இந்த பெயரற்ற ரயில் நிலையம் உண்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த பெயரில்லா ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தில், பர்தமான் (Bardhaman) நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மஞ்சள் பலகையில் பெயர் இல்லையென்றாலும், அந்த நிலையம் முற்றிலும் செயல்பாட்டில் உள்ளது; தினமும் பல ரயில்கள் அங்கு நின்று செல்கின்றன, பயணிகள் வழக்கம்போல ஏறி இறங்குகிறார்கள்.
அந்த நிலையம் அமைந்துள்ள பகுதியின் இருபுற கிராமங்களும் தங்களது கிராமத்தின் பெயரை நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என வாதிட்டனர். இந்த விவகாரம் கடுமையாகி, நீதிமன்றத்திற்கே சென்றது. தீர்ப்பு வரும்வரை, ரயில்வே அதிகாரிகள் பெயர்ப் பலகையில் இருந்த எழுத்தை அகற்றினர். அதிலிருந்து இன்றுவரை, அந்த ரயில் நிலையம் பெயரற்ற நிலையமாகவே உள்ளது.
மேலும் விசித்திரமானது என்னவெனில், இந்த ரயில் நிலையம் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இந்தியாவில் இதுவே ஒரே ரயில் நிலையம், ஞாயிற்றுக்கிழமையில் செயல்படாத நிலையமாகும். அதாவது பெயரில்லாமல் இருந்தாலும், இந்த ரயில் நிலையம் ஒரு சுவாரஸ்யமான புதிராகவும், செயல்படும் உண்மை நிலையமாகவும் இந்திய ரயில்வே வரலாற்றில் திகழ்கிறது.
Read More : ஸ்டைலிஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.55,800..! 55 கிமீ மைலேஜ்.. EMI 1,700 தான்!



