பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், “உரிமை மீட்க – தலைமுறை காக்க” என்ற தலைப்பில் நடைபயணத்தை ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் மேற்கொண்டார். இந்த நடைபயணம் ஆற்காடு பைபாஸ் சாலையில் தொடங்கி, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்து வெறுமனே ஒரு சீரியல் ஷோ எனக் கடுமையாக விமர்சித்தார். யார் நலனை காக்க போகிறீர்கள்? தமிழக மக்களின் நலனோ? இல்லை சாராயம், கஞ்சா விற்பவர்களின் நலனோ? எனக் கேள்வியெழுப்பிய அவர்,
தெரு தோறும் சாராயக் கடைகளை மூடினால் மக்கள் நலமாக இருப்பார்கள். ஆனால் அதற்கு தமிழக அரசுக்கு துப்பில்லை என்றார்.
மேலும் “உங்களுடன் ஸ்டாலின், இவர்களுடன் ஸ்டாலின், எங்கும் ஸ்டாலின்! சீரியல் ஷூட்டிங்காக இரு மணி நேரம் நடக்கிறது. மக்கள் அதை நம்பி ஏமாற மாட்டார்கள்; அது முந்தைய காலம்!” என்றார். அன்புமணி ராமதாஸ், மாநில மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றதைச் சுட்டிக்காட்டினார். “மருத்துவ வசதிகள் சரியாக இல்லாமல் இருந்தபோதும், முகாம்கள் நடத்துகிறார்கள். அது வெறும் கண் துடைப்புத்தான்,” என்றார்.
திமுக அரசு கடந்த தேர்தலில் கூறிய 541 வாக்குறுதிகளில் சிறிதளவையே நிறைவேற்றியுள்ளதாகவும், “அரைகுறையாக 60 வாக்குறுதிகள் மட்டும் செய்துவிட்டு 700 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாகக் கூறுகிறார்கள்.. இது பொய்,” எனக் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தி வரும் சூழலில் தமிழகத்தால் ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் என தமிழகம் செய்ய விரும்பாத விவகாரங்களில் கண்துடைப்புக்காக குழுக்களை மட்டுமே அமைப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட மதிப்பது இல்லை எனவும், இந்த திமுக அரசு டிராமா கோஷ்டி என குற்றஞ்சாட்டியதோடு, தரவுகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பில் உள்ஒதுக்கீட்டை கூட வழங்கவில்லை என விமர்சனம் செய்தார்.
Read more: மாதவிடாய் காலத்தில் நடைப்பயிற்சி செய்றீங்களா..? இவர்களெல்லாம் தவிர்ப்பது நல்லது..!