தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், இனி சொத்துகளைப் பதிவு செய்ய வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) என்று அழைக்கப்படும் இந்த புதிய வசதி, முதற்கட்டமாகப் புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய முறையில், விற்பனையாளர்களும், டெவலப்பர்களும் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனிலேயே பதிவேற்றலாம். சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் அந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்த்து, ஆன்லைனிலேயே அங்கீகாரம் வழங்குவார்கள். இந்தச் செயல்முறை பாதுகாப்பாக நடைபெற, ஆதார் அடிப்படையிலான கைரேகை மற்றும் கருவிழி அங்கீகார முறை பயன்படுத்தப்பட உள்ளது.
கட்டுமான நிறுவனங்கள், இந்த பயோமெட்ரிக் சாதனங்களைக் கொண்டு ஆவணங்களைச் சரிபார்ப்பார்கள். இது பரிவர்த்தனையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும். இந்த வசதி ஒரு விருப்பத் தேர்வாக வழங்கப்படுவதால், தேவைப்படுபவர்கள் ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம் அல்லது வழக்கமான முறையில் அலுவலகத்திற்குச் சென்றும் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
புதிய திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் :
இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தால், சார் பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். ஆவணப் பதிவில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களை நீக்குவது, சொத்துப் பதிவில் நடைபெறும் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
Read More : குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா..? குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்..?