2025 ஜூன் 12-ம் தேதி 250-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானிகள் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெளிவாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில், விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவர், இந்த விபத்துக்கான விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள்
நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மல்யா பக்சி தலைமையிலான அமர்வு “இது மிகுந்த துயரமான விபத்து. ஆனால் உங்கள் மகன் அல்லது விமானிகள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. எவரும், குறிப்பாக விமானிகள், இந்த விபத்திற்குக் காரணமல்ல. எங்களிடம் உள்ள அறிக்கையில் விமானிகளுக்கு எதிராக எந்த சுட்டிக்காட்டும் இல்லை. இது முற்றிலும் தொழில்நுட்ப விபத்து போல தெரிகிறது.
Cockpit Voice Recorder-இல் ஒரு விமானி, “சுவிட்ச் ஆஃப் செய்தீர்களா?” எனக் கேட்டார்; அதற்கு கேப்டன் சபர்வால் “இல்லை” என்று பதிலளித்தார்.. இதுவே அறிக்கையில் உள்ள ஒரே குறிப்பாகும்.” என்று தெரிவித்தார்..
மனுவின் விவரங்கள்
புஷ்கராஜ் சபர்வால் மற்றும் Federation of Indian Pilots சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “ Aircraft Accident Investigation Board (AAIB) அளித்த ஆரம்ப அறிக்கையில் “மனிதப் பிழை” எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் அது “பாகுபாடும் குற்றப்பரப்பும் கொண்டது”, மேலும் மின்சார/டிஜிட்டல் கோளாறுகளைப் பற்றி சரியாக ஆராயவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
பைலட் பிழை என முடிவெடுப்பதற்கு முன், தொழில்நுட்ப கோளாறுகள் நீக்கப்படவில்லை என்பதால், இது நியாயமற்றது மற்றும் மறைந்த விமானிகளின் கௌரவத்தை குலைக்கும் என வாதிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் கருத்துகள்
நீதிபதிகள் மேலும் “வெளிநாட்டு பத்திரிகைகளில் (எ.கா. Wall Street Journal) வந்த தகவல்கள் எங்களை வழிநடத்தாது. அவற்றுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும். இந்திய உச்சநீதிமன்றத்தில் அல்ல. இந்தியாவில் 142 கோடி மக்கள் இருக்கிறார்கள். யாரும் விமானிகளே காரணம் என்று நம்பவில்லை. இது ஒரு தொழில்நுட்ப விபத்து. விமானிகள் மீது குற்றச்சாட்டு இல்லை.” என்று தெரிவித்தார்.. ஏர் இந்தியா விபத்துக்குக் காரணம் விமானிகள் அல்ல – அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை.”
விபத்தின் பின்னணி
2025 ஜூன் 12 அன்று, ஏர் இந்தியா விமானம் AI-171, 230 பயணிகள் மற்றும் 12 குழு உறுப்பினர்களுடன், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்தது. 229 பயணிகள், அனைத்து குழுவினரும், தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். AAIB, அமெரிக்க NTSB, இங்கிலாந்து AAIB, மற்றும் Boeing பிரதிநிதிகளுடன் சேர்ந்து விசாரணை மேற்கொண்டது.
ஆரம்ப அறிக்கையின் விவரம்
ஜூலை 12 வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளில், இரு எஞ்சின் “Fuel Control Switch” RUN-இல் இருந்து CUTOFF-க்கு மாறியது, இதனால் சக்தி இழப்பு ஏற்பட்டது. Ram Air Turbine (RAT) தானாக இயக்கப்பட்டது, இது மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டபோது மட்டுமே நிகழும் அவசரநிலை ஆகும்.. பைலட்டுகள் மீண்டும் சுவிட்சை இயக்கியபோதும், விமானம் உயரம் பெறவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு “Mayday” அழைப்பு பதிவாகி, பின்னர் விமானம் விழுந்தது.
Wall Street Journal குற்றச்சாட்டு
இதனிடையே அமெரிக்க பத்திரிகை Wall Street Journal வெளியிட்ட செய்தியில், கேப்டன் சபர்வால் தவறுதலாக சுவிட்சை அணைத்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் AAIB அதனை “பொறுப்பில்லாத குற்றச்சாட்டு” என மறுத்தது.
இந்த வழக்கு, Safety Matters Foundation என்ற என்.ஜி.ஓ தாக்கல் செய்த இதேபோன்ற மனுவுடன் இணைத்து, அடுத்த வாரம் விசாரிக்கப்படும். செப்டம்பர் மாதத்திலும் இதே அமர்வு, “விமானிகளின் மீதான குற்றச்சாட்டு துயரமானது” எனக் கூறி, விசாரணை நியாயமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
Read More : 150+ விமானங்கள் தாமதம்.. டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு.. பயணிகள் அவதி!



