திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, பழி போடும் அரசியல் செய்வது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல், பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து பேசுவது, கரூர் சம்பவத்தில் மக்களை சந்திக்காமல் ஓடியது, தனது தொண்டர்களை ( ரசிகர்களை) கட்டுப்படுத்தாதது என விஜய் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.. அதே போல் விஜய் ஊடகங்களை சந்திக்காதது குறித்தும் விமர்சனம் எழுந்து வருகிறது..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் முதல் முறையாக தேசிய ஊடகமான NDTVக்கு நேர்காணல் அளித்துள்ளார்.. NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் ஷிவ் அரூர் மற்றும் அரசியல் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோருக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
முதலாவதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு அதிர்ச்சியாக இருந்ததாகவும், அதுபோன்ற ஒன்று நடக்கும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்காததால், அது இன்றும் தன்னை ஏதோ ஒரு வகையில் பாதிப்பதாகவும் விஜய் கூறினார். நான் செய்ய விரும்புவதில் உறுதியாக இருப்பவன் நான் எனது முடிவை எடுத்துவிட்டேன்.. அரசியல் தான் எனது எதிர்காலம் என்று தெரிவித்தார்..
ஆனால், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டிற்கு அனுமதி கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ள தனது தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாக விஜய் கூறினார். இருப்பினும், தனது அரசியல் காரணமாகத் தனது திரைப்படம் குறிவைக்கப்படலாம், இது போன்ற ஒன்று நடக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் விஜய் தெரிவித்தார்.. அதற்கு தான் மனதளவில் தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார்..
நடிகர் ஷாருக் கானின் ரசிகர் என்று விஜய் கூறியுள்ளார்.. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தனது முன்மாதிரிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாக, ஒரு துணைப் பாத்திரம் வகிக்கும் ‘கிங்மேக்கர்’ என்று முத்திரை குத்தப்படுவதை தான் விரும்பவில்லை என்று விஜய் சுட்டிக்காட்டினார். “நான் வெற்றி பெறுவேன். நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? வரும் கூட்டத்தைப் பார்த்தீர்களா?” என்று விஜய் கூறினார்.
மொத்தத்தில், தனது ரசிகர்களைக் கட்சித் தொண்டர்களாக மாற்றுவது மற்றும் தான் இந்தத் தேர்தலில் ஏதோ ஒன்றை நிரூபிப்பதற்காக மட்டுமல்லாமல், வெற்றி பெறுவதற்காகவே போட்டியிடுகிறேன் விஜய் கூறினார்..
அரசியலில் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.. இது ஒரு தேர்தலைப் பற்றியது மட்டுமல்ல. நீண்டகாலம் அரசியலில் பயணிக்க விரும்புகிறேன்.. நான் 33 ஆண்டுகள் ஒரு திரை இருந்து வருகிறேன்.., இப்போது அரசியலில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளேன்.. இந்த மாற்றம் அவ்வளவு எளிதானதாக இல்லை.. எனது அரசியல் பயணம் நீண்டகாலம் தொடரும்.. என்றும் விஜய் தெரிவித்தார்.



