தமிழகத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்.1) முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் ரூ.105-ஆக மாறாமல் தொடர்கிறது. ஆனால் பலமுறை பயண கட்டணம் ரூ.155-இலிருந்து ரூ.160 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், இலகுரக வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் பல அச்சு வாகனங்களின் கட்டணமும் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளி பேருந்துகளுக்கு ரூ.1,000 வசூலிக்கப்படும். உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகை பாஸ் திட்டத்தில் மாற்றமில்லை. இலகுரக வாகனங்களுக்கு பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான ரூ.270- லிருந்து ரூ.275 ஆகவும், மாதாந்திரக் கட்டணமாக ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயா்த்தப்பட்டிருக்கிறது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.360 லிருந்துரூ.370 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம் ரூ.540லிருந்து ரூ.545 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ. 10,845 லிருந்து ரூ.11,085 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Readmore: #Breaking : ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொலை: யார் இவர்?