1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு நோட்டீஸ்.. வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை..!

income

இந்தியாவின் வருமான வரித்துறை, 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை (ITR) தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சுமார் 1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப தயாராக உள்ளது.


தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த ITR கணக்குகளில் உள்ள பிழைகள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த நோட்டீஸ்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜூன் 30 எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோட்டீஸ் அனுப்பப்படும் முக்கிய காரணங்கள்:

* அசாதாரணமான பண டெபாசிட்கள்

* வங்கிக் கணக்குகளில் காட்டப்படாத வரவுகள்

* தவறான ஆதாரங்களை கொண்டு முதலீடுகள்

* ஜிஎஸ்டி தரவுகளுடன் ஏற்படும் விற்பனை முரண்பாடுகள்

* இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் (M&A) தொடர்பான விவரங்களில் ஏற்பட்ட மாறுபாடுகள்

இந்த ஆய்வு நடவடிக்கைகள், CASS (Computer Assisted Scrutiny Selection) எனப்படும் கணினி உதவி ஆய்வுத் தேர்வு முறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒரு தரவுகள் சார்ந்த, ஆபத்து அடிப்படையிலான அமைப்பாகும். இதில், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பணவிவரங்கள் மற்றும் பரிவர்த்தனை தரவுகளின் அடிப்படையில் சந்தேகமான ITR வழக்குகள் தேர்வு செய்யப்படுகின்றன.

வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டுகளில் சராசரியாக 50,000 முதல் 60,000 வரை வழக்குகள் ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட தரவுத்தளங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் 2.5 முதல் 3 லட்சம் வழக்குகள் வரை ஆய்வுக்கெடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டில், கிரிப்டோகரன்சி மூலமாக வந்த வருமானம் குறித்த கண்காணிப்பும் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. கிரிப்டோ பரிவர்த்தனைகளை வருமானத்தில் காட்டாமல் மறைத்தல் கண்டறியப்பட்டால், அபராதம், வழக்குப்பதிவு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமானம், முதலீடு மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் திறந்தவெளியில், தெளிவாக ITR-ல் பதிவு செய்ய வேண்டும். சந்தேகத்திற்கிடமான எந்த விபரமும் தவிர்க்கப்படாமல் இடம்பெற வேண்டும். ஏற்கனவே நோட்டீஸ் பெற்றவர்கள் உரிய சட்ட ஆலோசனை பெற்று பதிலளிக்க வேண்டும்.

Read more: பாலியல் புகாரில் சிக்கிய RCB வீரர் யாஷ் தயாள்!. பெண்களுடனான இன்ஸ்டா சாட்டிங் கசிவு!.

Next Post

பெரும் சோகம்.. பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் பலி.. பலர் மாயம்..!!

Thu Jul 3 , 2025
இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான பாலிக்குச் சென்று கொண்டிருந்தபோது கப்பல் கவிழ்ந்து நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 38 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். KMP துனு பிரதாமா ஜெயா என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவாவின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு, பாலி ஜலசந்தியில் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் […]
bali ferry sink indonesia news 1751506504 1

You May Like