“இனி இவருக்கு பதில் இவர் தான் ” இசையமைப்பாளருக்கு புதிய பதவி – அண்ணாமலை அதிரடி…

பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்த நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராமை கடந்த சில நாட்களுக்கு முன் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார் காயத்ரி ரகுராம், மேலும் தன்னுடைய தலைவர் மோடி தான் என்றும், அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்து பேட்டியும் கொடுத்தார்.

annamalai1

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் இருந்த பதவியை இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி ” பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் பிரிவின் மாநில தலைவராக பிரபல இசையமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதன் துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்” என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Newsnation_Admin

Next Post

குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை...! தமிழக காவல்துறை அதிரடி

Sun Dec 4 , 2022
பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி […]
IMG 20221204 065359

You May Like