அசத்தல்…! இளைஞர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை…! வரும் 28-ம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு 1,000 ரூபாய் அரசால் வழங்கபடுகிறது.

உங்கள் கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. SC/ST பிரிவினர் 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப் பட்டம்‌ பெற்றவர்கள் இதனை பெற முடியாது.

இதற்கு நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ சேர்த்து இம்மாதம் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

“ மதச்சார்பற்ற இந்தியாவில் இந்த குற்றங்கள் வேரறுக்கப்பட வேண்டும்..” உச்சநீதிமன்றம் கருத்து..

Tue Feb 7 , 2023
மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் நடைபெறும் வெறுப்பு குற்றங்களுக்கு இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.. 62 வயதான கசீம் அஹ்மத் ஷெர்வானி என்ற நபர் தன்னை மதத்தின் பெயரில் சித்திரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க […]

You May Like