தொலைத்தொடர்பு துறை (DoT) வெளியிட்ட புதிய உத்தரவு காரணமாக, வாட்ஸ் அப் (WhatsApp) சிக்னல் (Signal), டெலிகிராம் (Telegram) போன்ற ஆன்லைன் மெசேஜிங் பயன்பாடுகளை பதிவு செய்த அதே SIM கார்டு இல்லாமல் இனி பயன்படுத்த முடியாது. அதாவது, உங்கள் மொபைலில் இந்த ஆப்களை பயன்படுத்த, அதே சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். சிம் மாற்றினால் அல்லது சிம் சாதனங்களில் பயன்படுத்த நினைத்தால், அது வேலை செய்யாது.
மேலும், WhatsApp Web போன்ற இணைய-கணினி பயன்பாடுகள் தொடர்ந்து செயல்படாது. பயனர்கள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக்-அவுட் செய்யப்படுவார்கள். இதனால் தொடர்ந்து வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்த முடியாது; அடிக்கடி மொபைலில் மீண்டும் உறுதிப்படுத்த (re-login) செய்ய வேண்டி வரும்.
தொலைத்தொடர்பு துறை (DoT) இந்த உத்தரவை நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக விளக்கியுள்ளது. ஆனால் தொழில்நுட்பத் துறையில் பலர் இந்த முடிவு, பயனர்களின் தனியுரிமையை பாதிக்கலாம், குடிபெயர்ந்து பயணம் செய்யும் (international travel) பயனர்களுக்கு சிரமம் ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.. ஒரு கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவதில் புதிய தடங்கல்கள், கூடுதல் பிரச்சனைகள் உருவாக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
இதனிடையே, டெலிகாம் நிறுவனங்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றன.
இதனால் அவர்கள் மற்றும் டெக் நிறுவனங்களுக்குள் இன்னொரு புதிய கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.
ஒரு மூத்த தொழில் நிர்வாகி பேசிய போது “ இவ்வளவு கடுமையான SIM– தொடர்பு சேவைகள் இணைப்பு (SIM linkage for communication services) மற்ற நாடுகளில் இந்த அளவுக்கு இல்லை. அரசு இந்த புதிய நடவடிக்கையை Telecommunication Cybersecurity Amendment Rules, 2025 என்ற விதிகளில் இருந்து அதிகாரம் பெற்று செயல்படுத்துகிறது. இந்த விதிகள் அக்டோபரில் அறிவிக்கப்பட்டவை. இந்த விதிகளின் கீழ், அரசு Telecommunication Identifier User Entity (TIUE) என்ற புதிய கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
TIUE என்றால் என்ன?
டெலிகாம் நிறுவனங்களைத் தவிர, பயனர்களை அடையாளம் காண மொபைல் எண்கள் போன்ற தொலைத் தொடர்பு அடையாளங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் அல்லது சேவைகள். அதாவது, வாட்ஸ் அப், சிக்னல், டெலிகிராம்m போன்ற பயன்பாடுகளும் உங்கள் போன் நம்பரை உங்கள் அடையாளமாக பயன்படுத்தலாம்.. அதனால் இவை TIUE வகையில் வருகின்றன. மொபைல் எண் மூலம் பயனர்களை அடையாளம் காணும் அனைத்து ஆப்களும் இனி டெலிகாம் விதிகளின் கீழ் வருவதாக அரசு கூறுகிறது.
DoT வழங்கிய இந்த உத்தரவு WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய விதி என்ன சொல்கிறது?
இந்த மெசேஜிங் மற்றும் சமூக ஊடக தளங்கள் செய்ய வேண்டியது.. 90 நாட்களுக்குள், தங்கள் சேவைகள் பதிவு செய்யப்பட்ட SIM கார்டுடன் “தொடர்ச்சியாக இணைந்திருக்க வேண்டும்” என்பதைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
அதாவது, நீங்கள் எந்த SIM எண்ணை வைத்து வாட்ஸ் அப் அல்லது சிகன்ல் செயலியில் பதிவு செய்தீர்களோ, அந்த SIM உங்கள் சாதனத்தில் இல்லை என்றால், அந்த ஆப் ஓடக் கூடாது. இதையே தொழில்நுட்ப ரீதியாக SIM Binding என்று அழைக்கிறார்கள்.
WhatsApp Web போன்ற சேவைகளுக்கு என்ன ஆகும்?
வாட்ஸ் அப் வெப் (WhatsApp Web) டெலிகிராம் வெப் (Telegram Web) போன்ற இணைச் சேவைகள் தொடர்ந்து இயங்க முடியாது. அவை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் தானாகவே லாக்-அவுட் செய்யப்பட வேண்டும். அதாவது, நீங்கள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் மொபைல் மூலம் மீண்டும் இணைக்க வேண்டும்.
அடுத்த படி என்ன?
இந்த தளங்கள் அனைத்தும் 4 மாதங்களுக்குள் DoT-க்கு விதிமுறை பின்பற்றல் அறிக்கை (compliance report) அளிக்க வேண்டும்.தற்போது வாட்ஸ் ஆப் போன்ற சேவைகள் OTP (ஒருமுறை கடவுச்சொல்) மூலம் பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பி, அதை நீங்கள் உள்ளிட்டாலே போதும். ஆனால் DoT-இன் புதிய உத்தரவைப் பின்பற்ற, இதைவிட கெடுபிடியான சரிபார்ப்பு செய்ய வேண்டி வருகிறது.
இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த ஆப்கள், பயனரின் SIM கார்டில் உள்ள IMSI எனப்படும் எண்ணை அணுக வேண்டும்.
IMSI என்றால் என்ன?
IMSI = International Mobile Subscriber Identity, இது உலகம் முழுவதும் ஒவ்வொரு மொபைல் பயனருக்கும் வழங்கப்படும் தனித்த அடையாள எண். இது SIM கார்டுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும். SIM-ஐ மாற்றினால் IMSI-யும் மாறிவிடும். அதாவது அரசின் உத்தரவு காரணமாக, வாட்ஸ் அப் அல்லது சிக்னல் போன்ற செயலிகள் ள் இனி OTP மட்டும் பார்த்து உங்களை சரிபார்க்க முடியாது. அவை அதே சிம் (அதே IMSI) தான் உங்கள் போனில் இருக்கிறதா? என்பதை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். IMSI மாறினால் அல்லது SIM இல்லாவிட்டால், அந்த ஆப் வேலை செய்யாது.
வாட்ஸ் அப் போன்ற உலகளாவிய தளத்திற்கு, உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர், அதில் இந்தியாவில் மட்டும் 50 கோடி பயனர்கள் உள்ளனர் இது சிக்கலாக மாறலாம்..
இதனால் வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவுக்காக மட்டும் தனது முழு தொழில்நுட்ப அமைப்பையும் (backend, security system, login verification methods) மறுபடியும் வடிவமைக்க / மாற்றி அமைக்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்தியா கொண்டு வரும் SIM-binding விதிகள், மற்ற எந்த நாட்டிலும் இவ்வளவு கடுமையாக இல்லை. ஆகவே, வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவுக்காக தனித்த தொழில்நுட்ப அமைப்பு உருவாக்க வேண்டி வரும், இது மிகப் பெரிய பணிச்சுமை மற்றும் செலவு.
இந்தியாவின் 500 மில்லியன் பயனர்களைத் தொடர்ந்து சேவை செய்ய, வாட்ஸ் அப் தனது முழு முறையையும் இந்திய விதிகளுக்காக தனியாக மாற்ற வேண்டும்.. இது உலகின் மற்ற நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது…
Read More : வேகமாக வளரும் AI; அடுத்த 20 ஆண்டுகளில் வேலையே இருக்காது; பணத்தின் தேவை குறையும்; எலான் மஸ்க் கணிப்பு!



