முக்கிய அறிவிப்பு…!பாராசிட்டமால் உள்ளிட்ட 128 மருந்தின் விலை உயர்வு…! முழு விவரம் இதோ..‌.

ஆண்டிபயாடிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் உட்பட 128 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பிற மருந்துகளின் விலைகள் மாற்றப்பட்டுள்ளன.

பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்த விலை திருத்தத்தில் அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலத்தின் ஆண்டிபயாடிக் ஊசிகள், வான்கோமைசின், ஆஸ்துமா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சல்புடெமால், புற்றுநோய் மருந்து டிரஸ்டுஜுமாப், வலி நிவாரணி இப்யூபுரூஃபன் மற்றும் பாராசிட்டமால் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை உள்ளடக்கியுள்ளது. அமோக்ஸிசிலின் மாத்திரைகளின் விலை ரூ.2.18 ஆகவும், செடிரிசின் மாத்திரைகளின் விலை ரூ.1.68 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்ற குறிப்பிடத்தக்க மருந்துகளில் 400mg மாத்திரையான இப்யூபுரூஃபன் அடங்கும், இந்த மருந்து ரூ.1.07க்கு விற்கப்படுகிறது. பாராசிட்டமால், ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு, டிஃபென்ஹைட்ரமைன் ஹைட்ரோகுளோரைடு மற்றும் காஃபின் மாத்திரைகளின் சில்லறை விலை ரூ.2.76 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமில ஊசிகளின் அதிகபட்ச விலை ரூ.90.38 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு விலைப்பட்டியலை தெரிந்துகொள்ள: https://www.nppaindia.nic.in/en/

Vignesh

Next Post

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! Degree முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Sun Jan 22 , 2023
HDFC வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Mgr-PL Insta பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் MBA, படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் […]
HDFC Bank Recruitment

You May Like