பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உடல்பருமன்!… இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது! ஆய்வில் அதிர்ச்சி!

சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள், உடல் பருமன் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


பெருங்குடல் புற்றுநோய் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலும் வயதானவர்களை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இன்று கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஐந்தில் ஒன்று 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படுவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் புற்றுநோய் கண்காணிப்புக் குழு நடத்திய ஆய்வில், அதிக உடல் எடையால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. சர்க்கரை-இனிப்பு பானங்களின் அதிக நுகர்வு மற்றும் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் அதிக நுகர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன.

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பில் மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைவரும் கொலோனோஸ்கோபி செய்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதற்கு ஆல்கஹால், புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சமநிலையற்ற உணவுப் பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.இந்த ஆபத்து காரணிகள் அனைத்தும் நுண்ணுயிர் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெருங்குடல் அல்லது மலக்குடலின் புறணியில் உள்ள ஆரோக்கியமான செல்கள் மாறி, கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து, கட்டி எனப்படும் பாதிப்பை உருவாக்கும் போது பெருங்குடல் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது.

மேலும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே பிடித்துவிட்டால், உயிர்வாழும் விகிதம் 90 சதவிகிதம் என்று வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வயிற்று வலி என்பது பெருங்குடல் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் இரத்தம் தோய்ந்த மலம், கறுப்பு மலம், இரத்தம் இல்லாததால் ஏற்படும் சோர்வு, வயிற்று வலி, குடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், உடல் சோர்வு மற்றும் பசியின்ம போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்

KOKILA

Next Post

மனைவி, கணவரின் குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பதும் கணவனுக்கு எதிரான கொடுமை தான்!... ம.பி.ஐகோர்ட்!

Sat Mar 25 , 2023
மனைவி , கணவரையும் அவரது குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்துள்ளார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதிகள் ஷீல் நாகு மற்றும் நீதிபதி வீரேந்திர சிங் ஆகியோர் அடங்கிய […]
mp high court

You May Like