ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டம் திதிலாகரில், 17 வயது இளைஞன், தனது 12 வயது தம்பியை கொன்று உடலை வீட்டிற்கு அருகே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் கடத்தல் வழக்கு என்ற கோணத்தில் விசாரணையை கையில் எடுத்தனர். ஆனால் சகோதரனை தம்பியை கொலை செய்தது கண்டறியப்பட்டது.
போலீசார் கூற்றுபடி, சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்ட மூத்த சகோதரன் பூபேஷ்-க்கும் அவரது தம்பிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் தணியாமல், சமையலறையில் இருந்த சுமார் 6 அங்குல நீளமுள்ள கத்தியால் தம்பியின் கழுத்தில் குத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தம்பியை குத்திக் கொன்ற பிறகு இரத்தத்தை சுத்தம் செய்ய முயன்றதுடன், வீட்டில் வைத்திருந்த விவசாய கருவியைப் பயன்படுத்தி இரண்டு முறை குழி தோண்டினார். முதலில் உடலை வீட்டின் பின்னால் புதைத்துள்ளார். அதன் பிறகு குடும்பத்தினர் தூங்கிய பிறகு இரவு 1 மணியளவில், வீட்டுப் பின்புறத்திலிருந்து தோண்டி வேறு இடத்தில் உடலை புதைத்தார்..
தம்பி பிறந்த பிறகு பெற்றோரின் அன்பு தமக்குக் குறைந்துவிட்டதாக எண்ணிய மூத்த சகோதரன், பொறாமையும், கோபமும் காரணமாக கொடூர முடிவெடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தது ஒன்றரை மாதங்கள் ஆகியும் மர்ம வழக்காகவே இருந்தது. மூத்த சகோதரைனின் நடத்தையில் தாய்க்கு ஏற்பட்ட சந்தேகமே இந்த வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
பின்னர் மருத்துவ குழு, மாஜிஸ்திரேட், முன்னிலையில் குற்றம் நடந்த இடத்தை மீண்டும் தோண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை போலீசிடம் ஒப்படைத்தார். சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.