தன்னை விட வயது அதிகம்..!! ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞர்..!! ஹேப்பி அண்ணாச்சி..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22 வயது இசைக்கலைஞர் ஜெடி வில் என்பவர் தன்னால் கர்ப்பமான 5 பெண்களுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தியுள்ளார். அவரது பாட்னர் லிஸி ஆஷ்லீக் என்பவர் இதை உறுதி செய்துள்ளார். கடந்த ஜனவரி 14ஆம் தேதி குயின்ஸ் என்ற பகுதியில் பேபி ஷவர் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான அழைப்பிதழ்களை 29 வயதான இந்த லிஸி ஆஷ்லீக் பகிர்ந்துள்ளார். அந்த அழைப்பிதழில் அவர்கள் இருவரது படங்களும் இருக்கிறது. மேலும், அதில் “வெல்கம் லிட்டில் ஜெடி வில்ஸ் 1-5” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேபி ஷவர் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தையும் அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் அப்பாவாக போகும் ஜெடி வில் தனது மனைவிகளுடன் கூலாக பல்வேறு போஸ்களை கொடுக்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஆஷ்லே, போனி பி, கே மெரி, ஜிலீன் விலா மற்றும் இயன்லா கலிஃபா கலெட்டி ஆகிய ஐந்து பெண்களும் ஒருவரை மற்றொருவர் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம். 5 பேரும் இணைந்து ஒன்றாக இருந்தால் மட்டுமே பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு நல்லது என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வில் தரப்பு கூறுகையில், “சமூகம் மாறிவிட்டது… இந்தக் காலத்தில் உறவுகள் எப்படி இருக்கிறது என்பதும் மாறிவிட்டது. பலதரப்பட்ட மனதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் வரத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே இந்த 5 பெண்களும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

’ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட தமிழக மக்களுக்கு ஆசை’..!! ’விடுமுறை கொடுங்க’..!! எல்.முருகன் கோரிக்கை..!!

Sun Jan 21 , 2024
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, மத்திய அரசு அலுவலகங்களுக்கு மதியம் வரை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் […]

You May Like