ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுஹா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எகாதசி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் நிர்வாகத்தில் இயங்கும் இந்தக் கோவிலுக்கு திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் தடுப்பு கம்பிகள் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த துயரச்சம்பவம் எப்படி நடந்தது?
கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பெரும் அளவிலான கூட்டம் ஒரே நேரத்தில் முன்னேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.. சுமார் 15,000 பேர் அங்கு திரண்டிருந்ததாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கூட்டத்தின் அழுத்தத்தால் தடுப்பு கம்பிகள் இடிந்து விழுந்தது, இதனால் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் ஒரே இடமாக இருந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
ஆந்திர உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா இதுகுறித்து பேசிய போது “கோவில் உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிக்கொண்டிருந்தபோது இரும்பு ரெயிலிங் இடிந்து விழுந்தது. அதனால் சிலர் கீழே விழ, மற்றவர்கள் அவர்கள்மேல் விழுந்தனர்,” என்று தெரிவித்தார்.
ஸ்ரீகாகுளம் எஸ்பி கே.வி. மகேஸ்வர ரெட்டி பேசிய போது, “கோவிலில் நுழைவு, வெளியேறும் வழி ஒன்றுதான். இரும்பு ஜன்னல் பகுதி இடிந்து விழுந்ததால் பயந்த மக்கள் பீதி அடைந்தனர். சுமார் 6 அடி உயரத்திலிருந்து மக்கள் கீழே விழுந்ததால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்..
தனியார் கோவில் – அரசு மேற்பார்வை இல்லை
ஆந்திர அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தக் கோவில் தனியார் நிர்வாகத்தில் இயங்குகிறது; அது அரசு மதிப்பீட்டுத் துறையின் கீழ் வருவதில்லை,” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவில் 2,000 முதல் 3,000 பேரை மட்டுமே ஏற்கும் திறனுடையது, ஆனால் சுமார் 25,000 பேர் ஒரே நேரத்தில் வந்ததாகவும், இது அதிகாரிகளுடன் முன் ஒருங்கிணைப்பின்றி நடந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஏகாதசி மற்றும் கார்த்திகை மாதம் (தெலுங்கு மாதம்) ஒரே நாளில் வந்ததாக வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் அனிதா கூறினார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்
முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.. மேலும் தனது பதிவி. “ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்ஹா வெங்கடேஸ்வர கோவிலில் ஏற்பட்ட மிதிப்பு விபத்து என்னை மிகவும் துயரப்படுத்தியது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.. அவர் அதிகாரிகளுக்கு காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.
ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “இது இதயத்தை உடைக்கும் விபத்து. பக்தர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது,” என்று தெரிவித்தார். மேலும் “இதேபோன்ற விபத்துகள் முந்தைய காலத்திலும் நடந்துள்ளன.. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியில் ஆறு பேர், சிம்ஹாசலத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பல முறை இப்படியான துயரங்கள் நிகழ்ந்தபோதும் அரசு எச்சரிக்கையாக செயல்படவில்லை. இது சந்திரபாபு நாயுடுவின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது..” என்று குற்றம்ச்சாட்டி உள்ளார்.. இனி இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஜெகன் மோகன் வலியுறுத்தினார்.
Read More : குப்பை தொட்டியில் கிடந்த பேப்பர்.. ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய நபர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!



