‘ஒருவனுக்கு ஒருத்தி’!… இனச்சேர்க்கை முடிந்ததும் ஆணை விழுங்கும் பெண் அனகோண்டா…! வியக்கவைக்கு தகவல்கள்…

உடலுறவை பொருத்தவரை மனிதர்கள், பறவைகள், பாம்புகள் என ஒவ்வொரு உயிரினத்திற்கும் சில விந்தையான பழக்கங்களும் உண்டு. அதில் ஒன்றுதான், இனச்சேர்க்கை முடிந்ததும் தன் ஆண் துணையைச் சாப்பிட்டுவிடுவது. ஒவ்வொரு முறையும் உடலுறவு குறித்து அதிக ஆராய்ச்சி செய்யும்போது, ​​மேலும் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ ஹைலேண்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பூச்சியியலாளரான ஜீசஸ் ரிவாஸ், தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத அனகோண்டா பாம்பின் பாலியல் வாழ்க்கை குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். அதாவது, அனகோண்டா பாம்புகளில், இனச்சேர்க்கைக்குப் பிறகு, ஆண் பாம்பை பெண் பாம்பு சாப்பிட்டுவிடுகிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக உயிரினங்களில் ஆண்களின் உருவ அமைப்பு பெரிதாகவும், பெண்களின் உருவ அமைப்பு சிறிதாகவும் இருக்கும் நிலையில், பாம்புகளைப் பொறுத்தளவில் பல இடங்களில் இந்த அளவு மாறுபடுகிறது. ஆண்களின் உருவ அமைப்பு சிறிதாகவும், பெண்களின் உருவ அமைப்பு பெரிதாகவும் இருக்கிறது. மேலும், இனச்சேர்க்கைக்குப் பின்னர் ஆண் பாம்புகளை பெண் பாம்புகள் விழுங்கி விடுவது பல சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனகோண்டா இனங்களில், பெண் பாம்புகள் ஆண் பாம்புகளை விட ஐந்து மடங்கு பெரிதாக உள்ளன. அதனால் பெண் பாம்புகள் எளிதில் ஆண் பாம்புகளை விழுங்க முடிகிறது. பல்லிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் பொதுவாக பெண்களை விட ஆண்களின் உருவம் பெரிதாக இருக்கும் நிலையில், பாம்புகளில் இது போல் மாறுபட்ட உருவ அமைப்பு காணப்படுவது ஆச்சரிமளிக்கும் விதத்தில் உள்ளது.

இனச்சேர்க்கையின் போது, ​​ஆண் பாம்பு தனது வாலால் பெண் துணையைத் தள்ளி பெண்ணின் பிறப்புறுப்பை அடைகிறது. எனவே, பாம்புகளைப் பொறுத்தளவில் பெண்களின் உருவத்தை விட ஆண்களின் உருவம் பெரிதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண் பாம்பின் பெரிய உருவ அமைப்பு, அதிக முட்டைகளை இட்டு குஞ்சுகளைப் பெற்றெடுக்கும் நன்மையைத் தருகிறது. இதனால் பொதுவாகவே சிறிய உருவ அமைப்பைக் கொண்டுள்ள ஆண் பாம்புகள் இனச்சேர்க்கையின் போது பெரிய உருவ அமைப்பைக் கொண்டுள்ள பெண் பாம்புகளை நாடுகின்றன.

அனகோண்டா வகை பாம்புகளில் பெண் பாம்புகள் தான் முதலில் இனச்சேர்க்கைக்கு ஆர்வம் காட்டுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. பெண் பாம்புகள் உறக்கநிலையில் இருந்து வெளியே வரும்போது, தோல் உறிக்கின்றன. இந்த சமயத்தில் அவற்றின் உடலில் இருந்து ஃபெரோமோன் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதன் வாசனையை வைத்து ஆண் பாம்புகள் ஈர்க்கப்படுகின்றன. ஆண் பாம்புகள் இந்த வாடையை வைத்தே பெண் பாம்புகளின் அளவையும் கணித்துவிடுகின்றன. ஒரு பெண் பாம்பு பல ஆண் பாம்புகளுடன் உடலுறவில் இருந்தாலும், பெரும்பாலும் ஆண் பாம்புகள் ஒரு பெண்ணிடம் மட்டுமே இனச்சேர்க்கை செய்வதாகவும் கண்டறிந்துள்ளனர்.

Kokila

Next Post

#சற்றுமுன்..!! முத்தரசன் உடல்நிலை எப்படி இருக்கு..? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!

Sat Oct 14 , 2023
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய மாதா் தேசிய சம்மேளன மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவருக்கு, மருத்துவா்கள் சோதனை செய்ததில் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஆலோசனை கூறினா். இதையடுத்து, திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், […]

You May Like