கேரள மாநிலம் சங்கரம்குளம் பகுதியில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது சிறுவன் சிறு கல்லை விழுங்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் சங்கரம்குளம் பள்ளிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மஹ்ரூப் – ருமானா தம்பதி. இவர்களது ஒரு வயது குழந்தை அஸ்லம் நூஹ். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அறியாமல் ஒரு கல்லை எடுத்து விழுங்கியுள்ளான். அது தொண்டையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோட்டக்கலில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் தொண்டையில் கல் சிக்கியதால் ஏற்பட்ட கடுமையான சுவாசப் பாதிப்புகளே மரணத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல் போன்ற சாதாரண விளையாட்டுப் பொருட்களும், சிறுவர்களுக்குப் பெரும் ஆபத்தாக மாறக்கூடும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைக்கும் பழக்கம் உள்ளது. இதை பெற்றோர் கவனிக்க தவறினால், ஒரு கணத்தில் பேரிழப்பாகி விடுகிறது. பலூன்கள், பட்டாணி, நாணயங்கள், சிறு பொம்மைகள் போன்றவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Read more: பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ஆண்களே, இதை மிஸ் பண்ணிடாதீங்க!



