Onion 2024: வந்தது அதிரடி உத்தரவு..! மார்ச் 31-ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதி தடை விதித்த மத்திய அரசு…!

வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31-ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8, 2023 அன்று, அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு தற்பொழுது மார்ச் 31 வரை தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்து மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோஹித் குமார் கூறுகையில்; வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படவில்லை. அது நடைமுறையில் உள்ளது மற்றும் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

நுகர்வோருக்கு நியாயமான விலையில் வெங்காயம் போதுமான அளவு உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை. மொத்த வெங்காய விலை பிப்ரவரி 17 அன்று குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,280 ஆக இருந்த மொத்த வெங்காயத்தின் விலை பிப்ரவரி 19 அன்று குவிண்டாலுக்கு 40.62 சதவீதம் அதிகரித்து ரூ.1,800 ஆக உயர்ந்தது.

English Summary: Onion export ban till March 31

Vignesh

Next Post

Annamalai: இலவச நலத்திட்டங்களில் கூட கமிஷன் கேட்கும் திமுக!… எந்தத் தைரியத்தில் பட்டியலை கேட்கிறார் ஸ்டாலின்!… அண்ணாமலை!

Fri Mar 1 , 2024
Annamalai: மக்களுக்கு இலவசமாகச் செயல்படுத்தும் மத்திய அரசின் நலத்திட்டங்களிலும் கமிஷன் கேட்கும் கட்சி தானே முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருப்பதாகவும், தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ஒவ்வொரு […]

You May Like