எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்…! ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள்…!

College students 2025

எம்எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இரவோடு இரவாக டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...!

Tue Aug 12 , 2025
திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (சென்னை) கூடுதல் காவல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீ, […]
varun 2025

You May Like