சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது. பள்ளி பிரிவிற்கு 01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும் (19வயதிற்குட்பட்டோர்). 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளியில் பயிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ ஆகிய போட்டிகளில் பங்குகொள்ளலாம்.
கல்லூரி பிரிவிற்கு 01.07.2000 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவர்கள் 25 வயதிற்குட்பட்டோர் தாங்கள் படிக்கும் மாவட்டத்தில் தடகளம், இறகுப்பந்து. கூடைப்பந்து. கிரிக்கெட் கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து கேரம் சதுரங்கம், பால்பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளலாம். பொதுப்பிரிவிற்கு 15 முதல் 35 வயதிற்குட்பட்டோர் 01.01.1990 முதல் 01.01.2010 (35வயதிற்குட்பட்டோர்) 5 வருடம் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். தடகளம், கிரிக்கெட் வாலிபால் கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. தடகளம், இறகுப்பந்து, வீல்சேர் மேசைப்பந்து, எறிபந்து, கபாடி, Adapted Volleyball (தழுவிய கைப்பந்து) ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளலாம். அரசு ஊழியர்கள் வயது வரம்பு இல்லை. அடையாள அட்டை கொண்டு பணிபுரியும் மாவட்டத்திற்காக கலந்து கொள்ளலாம். தடகளம், சதுரங்கம், கபாடி, வாலிபால், இறகுப்பந்து, கேரம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 16.08.2025 அன்றிலிருந்து 4 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு 20.082025 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இணையதள முன்பதிவு https://cmtrophy.sdat.in அல்லது https://sdat.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள இயலும். முன்பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.