இதை செய்தால் தான் ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்.. விஜய்க்கு அமித்ஷா போட்ட ஒரே கண்டிஷன்..! பாஜகவின் பிளான் நடக்குமா?

jananayagan amitshah

நடிகர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.. இதனால் ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் ஜனநாயகன் பிரச்சனை அரசியல் ரீதியான பிரச்சனையாக மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து அமித்ஷா தரப்பில் இருந்தே விஜய்யிடம் பேசினார்களாம்.. அதாவது, 2026 தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி முதன்முறையாக களமிறங்குகிறது.. இதற்கான பணிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளது..

இந்த சூழலில் தான் விஜய் தேர்தலில் நிற்பது, பிரச்சாரம் செய்வதெல்லாம் பிரச்சனை இல்லை.. ஆனால் விஜய் தனது பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே அட்டாக் செய்து பேச வேண்டும், திமுக அரசை மட்டுமே டார்கெட் செய்து விமர்சிக்க வேண்டும் என அமித்ஷா தரப்பு விஜய்க்கு கண்டிஷன் போட்டுள்ளதாம்..

பாஜகவை பற்றியோ, மத்திய அரசை பற்றியோ எந்த விமர்சனமும் முன்வைக்கக் கூடாது என்றும் விஜய்யிடம் அமித்ஷா தரப்பு பேசி வருகிறதாம்.. இதை செய்தால் சென்சார் சான்றிதழும் வந்துவிடும், படமும் எந்த சிக்கலும் இன்றி ரிலீசாகும் என்று சொல்கின்றனர்.. இதுகுறித்து விஜய் தரப்பும் படக்குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்..

எல்லா கட்சிகளுமே திமுகவை மட்டும் அட்டாக் செய்து பேசினால் எதிர்மறை தாக்கம் அதிகமாகும்.. இது அதிமுக பாஜக கூட்டணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று பாஜக நினைக்கிறது.. இதற்கு விஜய் மறைமுகமாக உதவ வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறதாம்..

கட்சி தொடங்கியது முதலே பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை அரசியல் எதிரி என்றும் விஜய் கூறி வருகிறார்.. எனினும் அவர் பாஜகவை பெரிதாக விமர்சிப்பது இல்லை.. மாறாக திமுக கடுமையாக விமர்சித்து வருகிறார்.. ஜனநாயகன் படம் ரிலீசாக வேண்டும் என்பதற்காக பாஜகவின் இந்த கண்டிஷனை விஜய் ஏற்பாரா அல்லது தனது கொள்கை எதிரியான பாஜகவை துணிந்து எதிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Read More : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் எப்போது..? மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது..?

RUPA

Next Post

Flash : ரூ.3,000 பணம் + பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

Thu Jan 8 , 2026
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் […]
cm stalin 3

You May Like