தூள்..! தமிழகம் முழுவதும் 14 & 15 ஆகிய இரண்டு நாள் மட்டும் தான்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

Tn Government registration 2025

மங்களகரமான தினங்களான ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.


அதன் அடிப்படையில், வரும் ஜூலை 14 மற்றும் 16-ம் தேதிகளில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more : “75 வயசுல கூலிங் கிளாஸ் போட்டு Slow Motion-லயே நடந்து..” பிரபல இயக்குனருக்கு ரஜினி கொடுத்த தரமான பதிலடி..

Vignesh

Next Post

முருகன் கோயில் கும்பாபிஷேகம்..! மதுரையில் நாளை பள்ளி & மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Sun Jul 13 , 2025
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் 04.07.2025-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி மஹா கும்பாபிஷேக விழாவை காண பொதுமக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
Holiday 2025

You May Like