ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் அகல் 9வது நாளை எட்டி உள்ளது.. இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 4 வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் வீர மரணம் அடைந்தனர்..
எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராணுவம் “தேசத்திற்காக கடமையாற்றிய துணிச்சலான வீரர்களான எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் உச்சபட்ச தியாகத்தை ராணுவம் மதிக்கிறது. அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளது.
குல்காம் மலைகளில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். “பயங்கரவாதிகள் நிறைய ஆயுதம் ஏந்தியவர்கள் என்றும், அதிநவீன ஆயுதங்களை அவர்களுடன் எடுத்துச் செல்கின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அகலில் உள்ள ஒரு வனப்பகுதியில் அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.. இதனால் அந்த பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
வனப்பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து வழிகளையும் படைகள் பயன்படுத்தி வருவதாக ஒரு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Read More : ‘இந்தியாவை மிஸ் பண்றேன்; டிரம்பை எப்படி கையாள்வது?. பிரதமர் மோடிக்கு ஆலோசனை கூறுவேன்!. நெதன்யாகு பேச்சு!