பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. அவர் கடந்த காலத்தில் 5 முறை பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை கசிய விட்டதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றது.
இந்திய ரகசியத் தகவல்கள் யாரால் கசிந்தது? யாருக்கு பயன்பட்டன? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. சன்னி யாதவ் கடந்த காலத்தில் பந்தய செயலிகளை ஊக்குவித்த வழக்கிலும் கைது செய்யபட்டிருந்தார், ஆனால் அதில் முன்ஜாமீன் பெற முடியாமல் துபாய்க்கு சென்றார். பின்னர், பாகிஸ்தானுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ரகசிய தகவல்களை வெளிநாட்டு அமைப்புகளுடன் பகிர்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் அவர் வந்தவுடன் கைது செய்தனர். சன்னி யாதவ் மட்டும் அல்ல, மேலும் 3 யூடியூபர்களும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, இந்திய ரகசிய அமைப்புகள், சமூக ஊடகங்களில் செயல்படும் வீடியோ பதிவர்கள் மீது கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளன.
சன்னி யாதவ் ஏன் பாகிஸ்தானுக்கு சென்று வீடியோக்கள் வெளியிட்டார்?, பாகிஸ்தானில் இருந்தபோது என்ன தொடர்புகள் வைத்திருந்தார்? என்பதையும் என்.ஐ.ஏ தீவிரமாக விசாரிக்கவிருக்கிறது. இது போன்ற சந்தேகத்திற்குள்ளான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக, சமூக வலைதளக் கண்காணிப்பில் பாதுகாப்புத் துறை புதிய நெறிமுறைகள் வகுக்கத் திட்டமிடுகிறது.
Read more: ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாது..!! விதிகளில் மாற்றம்..