2026 தேர்தல் களம் திமுக vs தவெக என இருமுனை போட்டி தான் என ஓபிஎஸ் ஆலோசகரான பண்ரூட்டி ராமச்சந்திரன் தெரிவித்தூள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் என் டி ஏ கூட்டணி ஒரு ஆபத்தான கூட்டணி என்றும் தமிழக மக்களுக்கு நன்மை பயக்காது என்று ஓபிஎஸ் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், என் டி ஏ கூட்டணி ஆபத்தானது. அக்கூட்டணி தமிழக மக்களுக்கு நன்மை பயக்காது. தன்னை மதிக்காத பாஜக கூட்டணியி இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் எனக் கூறினார்.
மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் சிறப்பாக பயணிப்பதாக கூறிய அவர், 2026 தேர்தல் களம் திமுக vs தவெக என இருமுறை போட்டி தான் நிலவுவதாக தெரிவித்தார். விஜய் ஓபிஎஸ் இணைந்தால் தென் மாவட்டங்களில் பலம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.